அரை சதம் ரகசியம் இதுதானா? ஹாக்கி போல மட்டையை பிடித்த அஸ்வின்… வைரல் மீம்ஸ்!

Ravichandran Ashwin Tamil News: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனே மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய 58வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசிய நிலையில், பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, அரைசதம் அடித்த அஸ்வின் 50 ரன்களும், படிக்கல் 48 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 161 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 18.1வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த தொடக்க வீரர் வார்னர் 52 ரன்களும், அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து சிக்ஸர் மழை பொழிந்த மிட்செல் மார்ஷ் 89 ரன்களும் ( 5 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தனர்.

கிரிக்கெட் கிரவுண்டில் ஹாக்கி விளையாடிய அஸ்வின்…

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட் இழப்பை சந்தித்து தடுமாறி வந்தது. அப்போது களமிறங்கிய ஆல்ரவுண்டர் வீரர் அஸ்வின் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சுழல் மன்னன் குல்தீப் பந்துவீச்சை அஸ்வின் எதிர்கொண்டபோது அவர் ஹாக்கி விளையாடுவது போல் சற்று குனிந்து பந்தை ஸ்வீப் செய்து விளையாடினார். அவர் அவ்வாறு, ஒரு வித்தியாசமான ஸ்டைலில் விளையாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போட்டியின் போதே இந்த புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்ட நிலையில், தற்போது இணைய வாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும், இது தொடர்பாக மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.