ஆந்திரா மாநிலம் மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே அசானி புயல் அமைதியாக கரையைக் கடந்தது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8-ம் தேதி புயலாக மாறியது. அசானி எனப் பெயரிடப்பட்ட அப்புயல், வடமேற்கு வங்க்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து, ஆந்திரா கடல் பகுதியில் நிலைக்கொண்டது. இதனால் ஆந்திராவின் வடகடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த அசானி, மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே கரையை கடந்தது.
புயல் கரையைக் கடந்தாலும், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: நைட் ஷிப்ட்டில் பணிபுரிபவர்களா? – உங்கள் ஆரோக்கியத்திற்குSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM