ஆந்திராவில் பலத்த மழை- 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்

திருப்பதி:

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது.

இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் கனமழை பெய்தது.

திருப்பதி, நெல்லூா் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், ‘அசானி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து மசூலிப்பட்டினம் நா்சாபுரம் இடையே நேற்று இரவு கரையைக் கடந்ததாக ஆந்திர பேரிடா் மேலாண்மை ஆணைய இயக்குநா் பி.ஆா்.அம்பேத்கா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

‘அசானி’ கரையைக் கடந்தாலும் ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 5060 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிதமானது முதல் பலத்த மழை பெய்யும். மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புயல் கரையை கடந்தாலும் ஆந்திர கடலோர பகுதியில் தொடர்ந்து மையம் கொண்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அசானி புயலால் ஆந்திர முழுவதும் பெய்த பலத்த மழையால் 1000 ஏக்கர் பயிர்கள் நாசமாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.