கொரோனா தொற்று எண்ணிக்கையும் பாதிப்புகளும் குறைந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். இதனால் உலகம் முழுவதும் கூகுள், பேஸ்புக், ஆப்பிள் முதல் டிசிஎஸ், இன்போசிஸ் வரையில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளனர்.
இதேபோலத் தான் மும்பையைச் சேர்ந்து ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து, ஆனால் நடந்தது முற்றிலும் மாறுபட நிகழ்வு.
3200 பேருக்கு கொரோனா.. WFH-ல் குழப்பம்.. ஐடி ஊழியர்கள் நிலை என்ன..?!
ஸ்டார்ட்அப்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த ஒரு ஸ்டார்ட்அ பிரிவு என்றால் அது கட்டாம் எட்டெக் துறை தான். ஆனால் கடந்த சில மாதங்களாகப் போதுமான முதலீடுகள் இத்துறையில் இல்லாத காரணத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றி வந்தது.
WhiteHat Jr நிறுவனம்
இந்நிலையில் இந்தியாவின் பிற நிறுவனங்களைப் போல் எட்டெக் பிரிவில் இருக்கும் WhiteHat Jr நிறுவனமும் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான இரண்டு வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
800 ஊழியர்கள் ராஜினாமா
WhiteHat Jr நிறுவனம் தனது ஊழியர்களை ஒரு மாத காலத்திற்குள் அலுவலகத்திற்குத் திரும்ப வர அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. மார்ச் 18 அன்று, வீட்டிலிருந்து வேலை செய்வதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கொள்கை நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சலில் மூலம் தெரிவித்தது.
2 வாரம்
மேலும் தொலைதூரத்திலிருந்து பணியாற்றும் ஊழியர்களை ஏப்ரல் 18 ஆம் தேதிக்குள் அலுவலகத்திற்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 2 வாரத்தில் சுமார் 800 ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற முடியாது என அறிவித்துப் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
முக்கிய வர்த்தகப் பிரிவு
சேல்ஸ், கோடிங், கணக்குப் பிரிவு ஊழியர்களை எனப் பல பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் தனது பணியை ராஜினாமா செய்துள்ளனர். இனி வரும் ஒவ்வொரு வாரத்திலும் குறிப்பிடத்தக்க ஊழியர்கள் ராஜினாமா செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Over 800 employees resign from WhiteHat Jr; Amid return to office call from management
Over 800 employees resign from WhiteHat Jr; Amid return to office call from management ஆபீஸ்-க்கு வர சொன்னது ஒரு குத்தமா.. 800 ஊழியர்கள் ராஜினாமா, ஆடிப்போன நிர்வாகம்..!