இதுதான் கடைசி படம்; இனி 100% அரசியல்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

அரசியலில் பிஸியாக இருக்கும் திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், தான் நடிக்கும் மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக தனது கடைசி படமாக இருக்கலாம் என்றும் இனி 100% அரசியல் பணிதான் என்று தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசியலில் பிஸியாக இருக்கிறார். சட்டப்பேரவை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்கிறார். திமுக கட்சி நிகழ்சிக்களிலும் கலந்துகொள்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் விரைவில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள், கே.என்.நேரு, சேகர்பாபு, செந்தில் பாலாஜி என அனைவருமே தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உதயநிதிக்கு விரையில் அமைச்சர் பதவி அளிக்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.

உதயநிதி அரசியலில் பிஸியாக இருந்தாலும், சினிமாவிலும் நடித்து வருகிறார். உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம், மே 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே போல, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் இந்தியா கிளிட்ஜ் இணையதளத்துக்கு அளித்த நேர்காணலில், ‘மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த நேர்காணலில் உதயநிதி, சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் எனவே 100% அரசியலில் கவனம் செலுத்துவதற்காகவும், அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவருடைய முடிவு, சரியான முடிவு என்று திமுகவினர் வரவேற்றுள்ளனர்.

மாமன்னன் படம் உதயநிதியின் கடைசி படம் என்பதால் அந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு உதயநிதியின் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.