புதுடில்லி: இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் வரும் 15ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.
கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், சுஷில் சந்திராவின் பதவிகாலம் வரும் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இதுநாள் வரை தேர்தல் கமிஷனராக இருந்த ராஜீவ் குமாரை, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக வரும் 15ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்க உள்ளார்.
புதுடில்லி: இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் கமிஷனராக ராஜீவ் குமாரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர் வரும் 15ம் தேதி பொறுப்பு ஏற்கிறார்.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.