டெல்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இவர் இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராவார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர், இந்தியாவின் தேர்தல்களை நேர்மையாக, விருப்புவெறுப்பின்றி, எவ்வமைப்பையும் சாராமல் நடத்துவதற்கு வழிவகை செய்பவர். இந்தியக் குடியரசுத் தலைவரால் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
தற்போது இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷீல் சந்திரா இருந்து வருகிறார். பின்னர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார். இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் (மே 2022 வரை) முடிவடைகிறது.
இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை குடியரசு தலைவர் நியமித்து உள்ளார். இவர் வரும் 15ந்தேதி தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்க உள்ளார்.