காதலியை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்திய காதலன், அந்தப்பெண்ணுடன் இருக்கும் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியதால் சாதிய வன்கொடுமை வழக்கில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான். இன்ஸ்டா காதலன் மதம் பிடித்த இம்சைக் காதலனாக மாறிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
திருப்பூரை சேர்ந்தவர் இமான் ஹமீப் , இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கரூரை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணிடம் அறிமுகமாகி உள்ளார். அந்த பெண்ணிடம் சாட்டிங் செய்து காதல் வலையில் வீழ்த்திய இமான், அந்தப்பெண்ணை அவர்களது வீட்டிற்கு தெரியாமல் திருப்பூருக்கு அழைத்து வந்து ஒரே அறையில் தங்கி இருக்க செய்துள்ளான்.
இந்த காதல் ஜோடி இரண்டு மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில் அந்த பெண்ணை தனது மதத்திற்கு மாற்ற இமான் ஹமீப் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல தான் நினைத்தது கிடைத்ததும் , காதலியை தினமும் அவரது சாதி மற்றும் மதத்தை சொல்லி டார்ச்சர் செய்யவும் தொடங்கி உள்ளான் இமான்.
இமான் தன்னை மதம் மாற்ற முயற்சித்ததால் வெறுத்து போன காதலி அவனை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இருவரும் ஒன்றாக ஒரே அறையில் தங்கி இருந்த போது செல்போனில் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை இமான் ஹமீப் சமூக வலைதளங்களில் பரப்பியதோடு மதம் மாறி மீண்டும் தன்னுடன் வந்து வாழும் படி காதலிக்கு இம்சை கொடுத்துள்ளான்.
இதையடுத்து கடந்த 4ம் தேதி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக புகார் அளித்தார். பவித்ராவின் புகாரின் பேரில் நல்லூர் போலீசார் ஜாதியை சொல்லி திட்டியது, பெண்ணை வன்கொடுமை செய்தது, கணினி தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தி அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்தனர்.
இம்சை காதலன் இமான் ஹமீபை போலீசார் கைது செய்தனர். இது போல இமான் வேறு பெண்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா ? என்பதை அறிய அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம், முக நூல் , டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல பழகி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றும் ரோமியோக்களிடம் பெண்கள் மிகுந்த கவனத்துடன் பழக வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.