கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில சிக்கி தவிக்கும் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பொறுபேற்றுக் கொண்டார்.
அவரது தலைமையில் 15 பேரை கொண்ட புதிய அமைச்சரவையும் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பதவியேற்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் முதல் நடவடிக்கையை தொடர்ந்து, விரைவில் முக்கியமான அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
நாடு நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், அதிலிருந்து மீள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எங்களிடம் பொருளாதார செயல் திட்டம் உள்ளது, நான் இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா உடனான இலங்கையின் உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இலங்கையில் அமையும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு இந்தியாவின் உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் இந்திய தூதரகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து