உக்ரைன் மீது போர் தொடுத்ததைக் கண்டித்து ஜெர்மனியின் சீமென்ஸ் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து வெளியேறியுள்ளது.
1851 ஆம் ஆண்டு மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரங்கள் இடையே தந்தித் தொடர்பை ஏற்படுத்திக்கொடுக்கச் சென்ற சீமென்ஸ் நிறுவனம் கடந்த 170 ஆண்டுகளாக ரஷ்யாவில் செயல்பட்டு வந்தது.
தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சீமென்சின் மொத்த வருவாயில் ஒரு விழுக்காடு ரஷ்யாவில் இருந்து கிடைத்து வந்தது.
ரஷ்யாவில் சீமென்சின் அதிவிரைவு ரயில் தயாரிப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் மூவாயிரம் பேர் பணியாற்றி வந்தனர்.