மெக்சிகோ கால்பந்து பிரபலத்தின் உடல் கருகிய நிலையில் அவரது வாகனத்தின் டிக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ பகுதியில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு வந்த அவசர அழைப்பினையடுத்து,
33 வயதான அன்டோனியோ சலாசர் என்ற கால்பந்து நட்சத்திரத்தின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிறன்று மீட்கப்பட்ட உடல் தொடர்பில் செஞ்சிலுவை மருத்துவ உதவிக்குழுவினருக்கு அவரது பாலினம் தொடர்பில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கருகியிருந்தது எனவும் கூறப்படுகிறது.
இறுதியில் செவ்வாய்க்கிழமை அந்த உடல் சலாசர் என்ற கால்பந்து நட்சத்திரம் என உறுதி செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சலாசரின் வாகனம் திருடப்பட்டதாக புகார் எதுவும் பதிவாகாத நிலையில், அவர் கொல்லப்பட்டு, சடலத்தை காருக்குள் வைத்து, பின்னர் நெருப்பு வைத்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ஆனால், அவரை கொலை செய்து, உடலை எரியூட்டிய பின்னர் காருக்குள் வைத்து நெருப்பு வைத்திருக்கலாம் எனவும், அதனாலையே அவர் அடையாளம் காண முடியாத வகையில் கருகியதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
2007ம் ஆண்டு பிரபல மெக்சிகோ கால்பந்து அனிக்காக களமிறங்கிய சலாசர், தொடர்ந்து நான்கு தொடர்களில் நாட்டின் பிரபலமான அணிக்காக விளையாடியுள்ளார்.
மெக்சிகோ நாட்டின் பிரபல கால்பந்து நட்சத்திரங்களில் ஒருவரான சலாசர், மிக கொடூரமான நிலையில் கொல்லப்பட்டுள்ளது அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.