அரசின் நலத்திட்டப் பயனாளிகளுடன் காணொலியில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, தந்தைக்குக் கண்பார்வை வரச் செய்வதற்காக மகள் மருத்துவம் படிக்க விரும்புவதை அறிந்து சற்றுநேரம் கண்கலங்கினார்.
குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் உள்ள அரசின் நலத்திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார்.
அயூப் பட்டேல் என்பவரிடம் பேசியபோது, மகள்களைப் படிக்க வைக்கிறீர்களா என வினவினார். அதற்குப் பதிலளித்த அவர், தன் மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவராக விரும்புவதாகத் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன எனப் பிரதமர் வினவியதற்கு, கண்பார்வையற்ற தந்தைக்குப் பார்வை வரச் செய்வதற்காக மருத்துவம் படிக்க விரும்புவதாக அயூப் பட்டேலின் மகள் பதிலளித்தார்.
இதைக் கேட்ட பிரதமர் சற்றுநேரம் அமைதியானதுடன் கண்கலங்கினார்.
அதன்பின் கருணையே உங்கள் பலம் எனக் கூறியதுடன், மகளின் மருத்துவராகும் கனவை நனவாக்க உதவி தேவைப்பட்டால் தெரிவிக்கும்படி கூறினார்.