LIC of India is likely to finalise the IPO share allotment on May 12, LIC will make its grand debut on BSE and NSE on May 17: இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), மே 4-ம் தேதி ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்ட நிலையில், மே 12-ம் தேதி பங்குகளை ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தது. ஒரு ஈக்விட்டி பங்கின் ஐபிஓ விலை 902-949 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் பங்குகள் ஐபிஓவில் 2.95 மடங்கு அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. எனவே யாருக்கெலாம் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஆர்வமாக முதலீட்டாளர்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் எல்ஐசி ஐபிஓவில் உங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டதா என்பதை ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று இங்கு பார்க்கலாம்.
நீங்கள் எல்ஐசி ஐபிஓவில் பங்கேற்க விரும்பும் எல்ஐசி பாலிசிதாரராக இருந்தால், எல்ஐசியின் அமைப்புகளில் உங்கள் பான் புதுப்பித்த நிலையில் இருப்பதையும், உங்களிடம் டிமேட் கணக்கு இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் எல்ஐசி ஒதுக்கீடு நிலையைச் சரிபார்க்க, எல்ஐசி அமைப்பு மற்றும் டிமேட் கணக்கு இரண்டிலும் உங்கள் பான் தகவல் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பாலிசிதாரர்கள் கட்-ஆஃப் விலையில் “பாலிசிதாரர் முன்பதிவுப் பகுதிக்கு” விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். பாலிசிதாரர், சில்லறை விற்பனை மற்றும் பணியாளர் ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள்.
நீங்கள் பாலிசிதாரராகவும் பணியாளராகவும் இருக்கும் சில்லறை முதலீட்டாளராக இருந்தால், மூன்று வகைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக ஏலம் எடுக்கலாம், மொத்தத் தொகை ரூ.6 லட்சமாக இருக்கும்.
பாலிசிதாரர்கள் எல்ஐசி ஐபிஓ நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
மும்பை பங்குச்சந்தையில் இணயதளத்தில் உள்ள https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற இணைப்பிற்கு சென்று ஈக்விட்டி என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா என்பதை தேர்வு செய்து, உங்களது ஐபிஓ விண்ணப்ப எண் அல்லது பான் எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து நான் ரோபாட் இல்லை என்பதை தேர்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மும்பை பங்குச்சந்தை பதிவாளர் கெவின் டெக்னாலஜிஸ் இணையதளம் மூலமாகவும் ஐபிஓவில் பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என பார்க்க முடியும். அதற்கு https://kcas.kfintech.com/ipostatus என்ற இணைப்பிற்கு செல்ல வேண்டும்.
தேவையான விவரங்கள் மேலே அளித்துள்ள இணைப்பிற்கு சென்று ஐபிஓ விண்ணப்ப எண், கிளைன்ட் ஐடி அல்லது பாண் எண்ணை உள்ளிட்டு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்க முடியும்.
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, 21,008.48 கோடி ரூபாய் மதிப்பிலான நாட்டின் மிகப் பெரிய பொதுப் பங்கு வெளியீட்டை நடத்தியது. மே 4-ம் தேதி தொடங்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்கு வெளியீடு, மே 9-ம் தேதி வரை நடைபெற்றது. முதல் நாள் முதல் ஐபிஓ மூலம் எல்ஐசி பங்குகளை அதன் பாலிசிதாரர்கள் அதிகளவில் வாங்கிக் குவித்தனர். ஆனால் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், அனுபவம் வாய்ந்த ரீடெயில் முதலீட்டாளர்கள் பெரும் அளவில் கவனம் செலுத்தாமல் இருந்தனர்.
ஐபிஓ மூலம் மொத்தமாக எல்.ஐ.சியின் 16.2 கோடி பங்குகள் விற்க முடிவு செய்யப்பட்டது. கடைசி நாள் முடிவில் 2.95 மடங்கு அதிகமாக விற்பனையாகி மொத்தமாக 47.83 பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கி இருந்தார்கள். அதில் யாருக்கெல்லாம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது இன்று தெரியவரும்.
எல்ஐசி ஐபிஓ-வில் பங்குகள் கிடைக்காதவர்களின் பணம் மே 13-ம் தேதி ரீஃபண்ட் செய்யப்படும். மே 16-ம் தேதி டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil