புதுடில்லி: டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சிஇஓ.,வாக கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா குழுமம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிலையில் ஏர் இந்தியா தனது நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ), நிர்வாக இயக்குநராகவும் நியூசிலாந்தை சேர்ந்த கேம்ப்பெல் வில்சனை (வயது 51) நியமித்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவர் குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
புதுடில்லி: டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சிஇஓ.,வாக கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.