மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் டேனியல் சாம்ஸ் வீசிய முதல் ஓவரில் சென்னை அணியின் டேவான் கான்வே காலில் பட்டது (எல்.பி .டபிள்யு) ஆக ,கள நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார்.
இதனால் கான்வே (ரிவியூ ) டிஆர்எஸ் முறை எடுக்கலாம் என நினைக்க மைத்தனத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக டிஆர்எஸ் முறை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
இதனால் கான்வே ஆட்டமிழந்தார் .அடுத்த சிறிது நேரத்தில் இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டது .
ஆனாலும் சிறிது நேரம் டிஆர்எஸ் முறை நிறுத்தப்பட்டது ஏன் என ஐபிஎல் நிர்வாகம் அதிகார்பூர்வமாக தெரியப்படுத்தவில்லை.