ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் – ராஜபக்சர்கள் போடும் திட்டம்


 நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய பிரதமரை நியமித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தை வழிநடத்த பிரதமராக பதவியேற்றுள்ளார்.

பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை புறக்கணித்த ஜனாதிபதி, அண்மையில் நாட்டு மக்களுக்கு வழங்கிய தேசிய உரையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதாக வாக்குறுதி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் - ராஜபக்சர்கள் போடும் திட்டம்

கடந்த 9ம் திகதி நாட்டில் ஏற்பட்ட வன்முறைய தொடர்ந்து 9 பேர் கொல்லப்பட்டதுடன், 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச இராஜினாமா செய்தார்.

இதனையடுத்து நாட்டு மக்களுக்கு வழங்கிய உரையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் நியமிப்பதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

இதன்படி, ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க பல தசாப்தங்களாக இலங்கையின் அரசியல் களத்தில் இருந்து வருகிறார். அவர் ஆறாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும், அவர் ஒரு கூட முழுமைய பதவி காலத்தில் இருந்தததில்லை.

ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் - ராஜபக்சர்கள் போடும் திட்டம்

ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களுக்கு நெருக்கமானவராகக் காணப்படுகிறார், அவர்களின் பாதுகாப்பிற்கும் அவர்கள் கோரக்கூடிய எந்தவொரு பாதுகாப்பான பாதைக்கும் ரணில் உத்தரவாதம் அளிப்பார் என்பதால் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்க்கட்சிகள் மத்தியிலோ அல்லது பொதுமக்கள் மத்தியிலோ பெரிய ஆதரவு இல்லை எனவும் கூறப்படுகின்றது.

ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் - ராஜபக்சர்கள் போடும் திட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று காலை சில மணி நேரம் நீக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதற்கு முன்னரே கொழும்பில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்கத் தொடங்கினர்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தமையால் வீதிகளில் அதிகளவு வாகனங்களை காணமுடிந்தது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைப் பொருட்கள் தீர்ந்துபோவதால் அல்லது கட்டுப்படியாகாத நிலையில் மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர்.


ரணிலின் நியமனம் எவ்வாறு பார்க்கப்படுகிறது?

ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமர் என்ற செய்தி இலங்கையில் பெரும் அதிர்ச்சியையும், நம்பிக்கையின்மையையும் தந்துள்ளது.

ஒரு காலத்தில் திறமையான தந்திரோபாய நிபுணராக இருந்தவிக்கிரமசிங்க, பல ஆண்டுகளாக அவரது பொது முறையீடு சீராக வீழ்ச்சியடைந்ததைக் கண்டார்.

கடந்த தேர்தலில், அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரே ஆசனத்தை மட்டும் பெற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் அவர் ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தமை அதற்கு ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகின்றது.

2015 இல் ராஜபக்சக்கள் அதிகாரத்தை இழந்தபோது அவர்களைக் காப்பாற்ற ரணில் உதவினார் என்று பலர் நம்புகிறார்கள்

இப்போது ரணிலின் நியமனம், ஜனாதிபதி விலக வேண்டும் என்ற எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை மீறுவதற்கான ஒரு வழியான நியமனம் என்றே பார்க்கப்படுகிறது.

ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் - ராஜபக்சர்கள் போடும் திட்டம்

வாரக்கணக்கான போராட்டங்களுக்கு மற்றொரு திமிர்த்தனமான பதிலடியாக இது பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேற்று இரவு வழங்கிய உரையை நாட்டு மக்கள் விமர்சித்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்த பின்னர் ஆற்றிய முதல் உரையாகும்.

ஜனாதிபதியின் சில அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு விட்டுக்கொடுக்க கோட்டாபய ராஜபக்ச முன்வந்தார், ஆனால் அதற்கான கால அட்டவணையை அமைக்கவில்லை.


கொழும்பில் ஏற்பட்ட வன்முறை

கிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இரண்டு போராட்டத் தளங்களை அழித்ததை அடுத்து, கடந்த 9ம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான அமைதியான போராட்டங்கள் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து சிறிது நேரத்தில் பிரதமர் பதவியில் மகிந்த ராஜபக்ச இருந்து விலகிய போதிலும், ஆத்திரமடைந்த மக்கள் ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் அவர்களுக்கு ஆதரவான பிற அரசியல்வாதிகளையும் குறிவைத்து தாக்க தொடங்கினர்.

ஒரு முறை கூட முழுமையாக பிரதமர் பதவியில் இருக்காத ரணில் - ராஜபக்சர்கள் போடும் திட்டம்

திங்கள் மற்றும் செவ்வாய் இரவுகளில் வன்முறைகள் பதிவாகியுள்ளன. இரண்டு முறை ஜனாதிபதி பதவி வகித்த முன்னாள் பிரதமர், தற்போது தனது சொந்த பாதுகாப்பிற்காக நாட்டின் வடகிழக்கில் உள்ள கடற்படை தளத்தில் தங்கியிருப்பதாக இராணுவம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில், மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 16 பேர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.