இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய சந்தையானது தற்போது வரையில் பலத்த சரிவில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பும் இன்று 23 பைசா சரிந்து, 77.46 ரூபாயாக சரிவில் தொடங்கியுள்ளது.
தற்போது 3 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1096.1 புள்ளிகள் குறைந்து, 52,992.29 புள்ளிகளாகவும், நிஃப்டி 347.5 புள்ளிகள் குறைந்து, 15,819.60 புள்ளிகளாகவும் சரிவினைக் கண்டுள்ளது.
இதற்கிடையில் இந்திய பங்கு சந்தையில் உள்ள அனைத்து குறியீடுகளும் சரிவில் காணப்படுகின்றன.
காளையின் பிடியில் சந்தை.. சென்செக்ஸ் மீண்டும் தொடர் ஏற்றம்..முதலீட்டாளர்கள் ஹேப்பி!
இன்டெக்ஸ்
பிஎஸ்இ மெட்டல்ஸ் குறியீட்டின் பங்கு விலையானது 4% மேலாக சரிவில் காணப்படுகின்றது. இதே பேங்க் நிஃப்டி 3% மேலாக சரிவில் கானப்படுகின்றது. இதே நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பிஎஸ்இ ஸ்மால் கேப்,, பிஎஸ்இ மிட்கேப்,
பிஎஸ்இ கேப்பிட்டல் குட்ஸ், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாக சரிவிலும், நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள விப்ரோ, டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்திலும், அதானி போர்ட்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, டாடா வங்கி, ஹிண்டால் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிவிலும் காணப்படுகின்றன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்திலும், இந்தஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவிலும் காணப்படுகின்றன.
ரூ.5 லட்சம் கோடி காலி
தொடர்ந்து 1000 புள்ளிகளுக்கு மேலாக இருக்கும் சந்தையில், 246.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பானது, 241.15 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கன்டுள்ளது. இன்று மட்டும் 5.16 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது. இதே ஏப்ரல் 11 உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 34 லட்சம் கோடி ரூபாய் இழப்பினைக் கண்டுள்ளது.
sensex falls 1000 points above: Rs.5 lakh crore gone
While the Sensex is down over 1000 points, its market cap is down over Rs 5 lakh crore.