ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்த விமானம்!..40 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலிருந்து திபெத்தின் நிங்சி நகருக்கு செல்லவிருந்த திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்படத் தயாராக இருந்தபோது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விமானத்தின் இறக்கைகளில் திடீரென தீப்பித்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்தனர். விமானத்தில் 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திபெத் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40 பேர் லேசாக  காயமடைந்ததாகவும் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சோங்கிங் விமான நிலையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | சீன விமான விபத்து: இரு கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதாக தகவல்

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குச் சென்ற விமானம் 29 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து மலைப்பகுதியில் விழுந்தது. இதில் விமானத்தில் பயனித்த 132 பேரும் உயிரிழந்தனர். கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் நிகழ்ந்த மிக மோசமான அந்த விமான விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் சீன விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | சீன விமான விபத்து: விமானம் செங்குத்தாக விழுந்தது ஏன் என குழம்பும் விஞ்ஞானிகள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.