கிட்டத்தட்ட கடவுளாகவே பார்க்கப்பட்டு, உச்சத்தில் வைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சிங்கள மக்களே இப்போது நாட்டை விட்டே துரத்தியுள்ளனர்.
இதற்கு காரணம் தான் என்ன?
இலங்கையை இனி ராஜபக்சர்கள் மட்டுமே ஆழ்வார்கள் என்று இருந்த நிலையில், இப்போது அனைத்து தலைகீழாக மாறியுள்ளது. இப்போது ஜனாதிபதியாக் யிருக்கும் கோட்டாபய ராஜபக்சவைத் தவிர, ராஜபக்ச குடும்பத்தினர் யாரும் இப்போது பதவியில் இல்லை.
மக்களின் தொடர் போராட்டத்திற்கு பிறகும் பதவிவிலக மறுத்த மகிந்தவும் கடைசியாக செவ்வாயன்று வேறு வழியின்றி ராஜினாமா செய்தார்.
அதன்பிறகு, நாடு இருக்கும் நெருக்கடி நிலையில் இரண்டே நாட்களில் புதிய அரசாங்கத்தை அமைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில், புதன்கிழமையன்று ரகசிய கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து, இன்று (12 மே) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பிரதமராக பதவியேற்றுள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் மீண்டும் பிரதமராகிறார்! குவியும் எதிர்ப்பு
வாக்களித்த மக்களை மறந்துவிட்டு, பல நாடுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளையம் மறந்துவிட்டு, சீனாவின் கைகோர்த்துக்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் விலையை பல மடங்காக உயரவிட்டு வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தார் மகிந்த ராஜபக்ச.
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்!
மின்வெட்டு, உணவுத் தட்டுப்பாடு, முந்தைய தலைமுறை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வேதனைமட்டுமே பட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டின் நிலைமையை உணர்ந்து போராட்டக்களத்தில் இறங்கினர். மகிந்த மீதும் ராஜபக்ச அரசாங்கத்தின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இனி ராஜபக்சர்கள் ஆதியமைக்கவே முயாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.