கட்டணத்தை குறைக்க விளம்பரம்.. நெட்ஃபிளிக்ஸின் புதிய திட்டம்!

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் உள்ளது. அண்மையில் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நெட்ஃபிளிக்ஸ் சந்தா கட்டணத்தை உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து பல லட்சம் வாடிக்கையாளர்களை நெட்ஃபிளிக்ஸ் இழந்தது.

தொடர்ந்து சந்தாதார்களை இழந்து வருவதால், கட்டணத்தைக் குறைக்கும் விதமாக, இந்த ஆண்டு இறுதிக்குள் தங்களது வீடியோ சேவையில் விளம்பரத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

டாலர் ஆதிக்கம்.. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு என்ன தெரியுமா..?!

கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக, சென்ற ஜனவரி – மார்ச் காலாண்டில் அதிகபட்சமாக 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. அது அடுத்து வர இருக்கும் மாதங்களில் 20 லட்சம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமும் 70 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.

விளம்பரத்துடன் வீடியோ சேவை
 

விளம்பரத்துடன் வீடியோ சேவை

ஏப்ரல் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த நெட்ஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரீட் ஹாஸ்டிங்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் கட்டணத்தைக் குறைத்து விளம்பரத்துடனான ஸ்ட்ரீமிங் சேவை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். இப்போது அதை துரிதப்படுத்தும் விதமாக இந்த ஆண்டின் இறுதிக்குள் விளம்பரத்துடனான சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தவல்கள் வெளியாகியுள்ளது.

டிஸ்னி

டிஸ்னி

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கட்டணத்தைக் குறைத்து விளம்பரத்துடன் சேவையை வழங்கும் போது ஓடிடி பிரிவில் போட்டி நிறுவனங்களாக உள்ள ஹெச்.பி.ஓ மேக்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்களுக்கு அது பெரும் போட்டியாக இருக்கும்.

கடவுச்சொல்

கடவுச்சொல்

நெட்ஃபிளிக்ஸ் நிறுவன சந்தாதாரர்கள் பலர் தங்களது பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்துகிறார்கள். அது பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி கடவுச்சொல்லைப் பகிரும் பயனர்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது எப்படி எனவும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.

நெட்ஃபிளிக்ஸ் சேவை இவ்வளவு நாட்களாக விளம்பரம் இல்லாமல் பார்த்து வந்த சந்தாதாரர்கள், விளம்பரத்துடன் பார்க்கும் போது அதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொருத்து இருந்து பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Soon Netflix Brings Cheaper Plan With Ads

Soon Netflix Brings Cheaper Plan With Ads | கட்டணத்தை குறைக்க விளம்பரம்.. நெட்ஃபிளிக்ஸின் புதிய திட்டம்!

Story first published: Wednesday, May 11, 2022, 20:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.