தொடர்ந்து கிரிப்டோகரன்சி சந்தையானது சரிவினைக் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பிட்காயின் மதிப்பானது எந்தளவுக்கு ஏற்றம் கண்டு வந்ததோ? அதனை விட மோசமான சரிவினைக் கண்டு வருகின்றது.
சொல்லப்போனால் இருக்கும் முதலீடாவது இருக்குமா? இருப்பதை எடுத்தாலாவது மிச்சமாகுமோ? என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
மொத்தத்தில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் மிகப்பெரியளவில் சந்தையில் செல் ஆஃப் (sell off) செய்யப்பட்டு வருகின்றது.
கிரிப்டோகரன்சி சந்தையில் ஏன் இந்த மோசமான சரிவு.. முதலீட்டாளர்கள் கவலை!
வெளியேறும் முதலீட்டாளர்கள்
பலரும் இருப்பதாவது மிச்சமாகட்டுமே என்ற அச்சத்தில் வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் கிரிப்டோகரன்சி நிபுணர்கள் இன்னும் சந்தையானது ஒரு நிலையான லெவலை எட்டவில்லை. இன்னும் சரியலாம் என்றே கூறி வருகின்றனர். ஆக சந்தையில் அடுத்த சில மாதங்களுக்கு பெரியளவில் மாற்றம் இருக்காது என கூறுகின்றனர்.
ஆலட்காயின்கள் சரிவு
கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவிலான சந்தை மதிப்பானது இன்று காலை நிலவரப்படி, 9.37% சரிவினைக் கண்டு, 1.27 டிரில்லியன் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் மேலும் சரியலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் முன்னணி ஆல்ட்காயின்கள் சரிவுடனேயே காணப்படுகின்றது.
பிட்காயின் மதிப்பு
பிட்காயின் மதிப்பு தற்போது (1.51 மணி நிலவரப்படி) 9.62% சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 32,132 டாலர்களாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 25,402 டாலர்களாகவும் உள்ளது. இதுவரையில் நடப்பு ஆண்டில் பிட்காயின் மதிப்பானது 43.72% சரிவினையே கண்டுள்ளது.
எத்திரியம் நிலை
எத்திரியத்தின் மதிப்பானது இன்று 18.93% குறைந்து, 1893.38 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2448 டாலர்களாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 1704.97 டாலர்களாகவும் உள்ளது. இதுவரையில் நடப்பு ஆண்டில் எத்திரியம் மதிப்பானது 52.68% சரிவினையே கண்டுள்ளது.
சோலானா
சோலானா மதிப்பானது 31.93% சரிவினைக் கண்டு, 43.22 டாலர்களாக காணப்படுகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 66.39 டாலர்களாகவும், இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 36.14 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவரையில் நடப்பு ஆண்டில் சோலானா மதிப்பானது 77.60% சரிவினையே கண்டுள்ளது.
ட்விட்டர் ரியாக்ஷன்
தொடர்ந்து சரிந்து வரும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பின் மத்தியில் ட்விட்டரில் #cryptocrash என்ற ஹேஷ் டேக் டிரெண்டிங் ஆகி வருகின்றது, பலரும் இது குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து ஒரு ட்விட்டர் பயனர் பங்கு சந்தையில் -2%, ஆனால் கிரிப்டோகரன்சி வர்த்தகர்களுக்கு -40% சரிந்துள்ளதாக பகிர்ந்துள்ளார். பலரும் இதனை பொன்சி திட்டங்கள் என கூறி வருகின்றனர்.
why bitcoin is falling down today again? bitcoin around 25,402 dollar
Cryptocurrency investors are in the worst fears. Meanwhile, the market is being sell off on a large scale.