கனரா வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து தொடர்ந்து தினம் ஒரு வங்கி நிறுவனம் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகித்தை உயர்த்தி அறிவித்து வருகின்றன.

பொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 0.10 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரையில் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா?

கனரா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 2 கோடி ரூபாய் வரையில், 46 முதல் 10 வருடங்களை வரை டெபாசிட் செய்யும் போது இந்த வட்டி விகித உயர்வு நன்மையைப் பெற முடியும். மே 12-ம் தேதி முதல் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு புதிய வட்டி விகிதம் கிடைக்கும்.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

இந்திய ரிசர்வ் வங்கி மே 4-ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. தொடர்ந்து வங்கி நிறுவனங்கள் கடன் மற்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

 வங்கிகள்

வங்கிகள்

ஏற்கனவே எஸ்பிஐ, பந்தன் வங்கி, கோடாக் மஹிந்தரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட பல்வேறு வங்கி நிறுவனங்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டியை ஏற்கனவே உயர்த்தி அறிவித்துள்ளன. எனவே இப்போது கனரா வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை இங்கு பார்கலாம்.

கனரா வங்கி ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்
 

கனரா வங்கி ரெகுலர் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்

7 முதல் 45 நாட்கள் வரை முதலீடு செய்தால் 2.90 சதவீத லாபம் கிடைக்கும். 46 முதல் 90 நாட்களுக்கு 4 சதவீதம், 91 முதல் 179 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 4.05 சதவீதம், 180 முதல் 269 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 4.50 சதவீதம், 270 முதல் 1 வருடத்திற்குள் முதலீடு செய்தால் 4.55 சதவீதம், 1 வருடம் முதலீடு செய்தால் 5.30 சதவீதம், 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் 5.40 சதவீதம், 2 வருடம் அல்லது 3 வருடம் வரையில் 5.45 சதவீதம், 3 வருடம் முந்தல் 5 வருடம் வரையில் 5.70 சதவீதம், 5 வருடத்திற்கு மேல் 10 வருடம் வரை 5.75 சதவீத லாபம் கிடைக்கும்.

மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்

மூத்த குடிமக்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்

7 முதல் 45 நாட்கள் வரை முதலீடு செய்தால் 2.90 சதவீத லாபம் கிடைக்கும். 46 முதல் 90 நாட்களுக்கு 4 சதவீதம், 91 முதல் 179 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 4.05 சதவீதம், 180 முதல் 269 நாட்கள் வரை டெபாசிட் செய்தால் 5 சதவீதம், 270 முதல் 1 வருடத்திற்குள் முதலீடு செய்தால் 5.05 சதவீதம், 1 வருடம் முதலீடு செய்தால் 5.80 சதவீதம், 1 வருடத்திற்கு மேல் 2 வருடத்திற்குள் 5.90 சதவீதம், 2 வருடம் அல்லது 3 வருடம் வரையில் 5.95 சதவீதம், 3 வருடம் முந்தல் 5 வருடம் வரையில் 5.20 சதவீதம், 5 வருடத்திற்கு மேல் 10 வருடம் வரை 6.25 சதவீத லாபம் கிடைக்கும்.

 அட்டவணை

அட்டவணை

 

Term Deposits (All Maturities) General Public   Senior Citizen  
  Rate of Interest (% p.a.) Annualised Interest yield (% p.a.) ** Rate of Interest (% p.a.) # Annualised Interest yield (% p.a.) **
7 days to 45 days* 2.9 2.93% 2.9 2.93%
46 days to 90 days 4 4.06% 4 4.06%
91 days to 179 days 4.05 4.11% 4.05 4.11%
180 days to 269 days 4.5 4.58% 5 5.09%
270 days to less than 1 Year 4.55 4.63% 5.05 5.15%
1 year only 5.3 5.41% 5.8 5.93%
Above 1 year to less than 2 years 5.4 5.51% 5.9 6.03%
2 years & above to less than 3 years 5.45 5.56% 5.95 6.08%
3 years & above to less than 5 years 5.7 5.82% 6.2 6.35%
5 years & above to 10 Years 5.75 5.88% 6.25 6.40%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Canara Bank Increased Fixed Deposit Inerest Rate From May 12

Canara Bank Increased Fixed Deposit Inerest Rate From May 12 | கனரா வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Story first published: Thursday, May 12, 2022, 21:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.