குடியரசு கட்சியின் வலுவான எதிர்ப்பால் அமெரிக்காவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா செனட் சபையில் தோல்வியில் முடிந்தது.
கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவளிக்கும் பெண்கள் சுகாதார பாதுகாப்பு மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில், ஒரு ஜனநாயகக் கட்சி உறுப்பினர் உள்பட 51 எதிர்ப்பு வாக்குகள் மூலம் குடியரசுக் கட்சியினர் மசோதாவைத் தோற்கடித்தனர்.
நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் வெற்றி மூலம் மசோதாவை நிறைவேற்ற ஜனநாயகக் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.