புதுடில்லி: மொழி மாற்றம் செய்ய பயன்படும் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கூகுள் நிறுவனம் ‛டிரான்ஸ்லேட்’ எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் மொழி மாற்றம் செய்து அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில், தற்போது 24 புதிய மொழிகளையும் அதில் இணைத்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்த 24 மொழிகளில் சமஸ்கிருதம், போஜ்புரி, பம்பரா, டோக்ரி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளும் அடங்கும். இதன்மூலம் கூகுள் டிரான்ஸ்லேட்டில் உலகம் முழுவதும் உள்ள 133 மொழிகளும், 19 இந்திய மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சேவைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதனால் 30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் செயலியில் சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளதற்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement