Tamil Serial Rating Raja Rani Season : அர்ச்சனா எல்லாருக்கும் கெட்டது பண்றா சுயநலமாக யோசிக்கிறா ஆனா அவளுக்கு ஒரு பிரச்சினை வந்தா மட்டும் எங்கிருந்தோ சந்தியா வந்து ஹெல்ப் பண்றா சீரியல்ல மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம்.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. தொடக்கத்தில் பெரியதாக ரசிகர்கர்களை கவராதா இந்த சீரியல் சமீப எபிசோடுகள் ரொம்பவே விறுவிறுப்பாக சென்று்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பார்வதியின் திருமணம். இந்த திருமணம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களை இந்த சீரியலை தொடர்ந்து பார்க்க தூண்டியது.
இப்போதான் திருமணம் முடிஞ்சிடுச்சே இனிமே வழக்கமாதான் போகுமா என்று கேட்டால் இப்போ ஒரு புதுப் பிரச்சினை ஸ்டார்ட் ஆகிவிட்டது. பார்வதியின் முன்னாள் காதலன் விக்கிக்கு ஐடியா கொடுத்து அர்ச்சனா போட்ட மாஸ்டர் பிளான் சொதப்பி இப்போ விக்கி ஜெயிலுக்கு போய்ட்டான் அல்லவா. அவன் மீதுள்ள கேஸை வாபஸ வாங்க வேண்டும்னு சொல்லி அவன் அப்பா அர்ச்சனாவை மிரட்டுகிறார்.
இதுக்கு முன்னாடி வரைக்கும் அர்ச்சனாதான் அடுத்தவஙகளுக்கு தொல்லை கொடுத்து பார்த்திருப்போம் இப்போ அர்ச்சனாவுக்கே விக்கி அப்பா ரூபத்தில் தொல்லை வந்துவிட்டது. இதில் இருந்து அர்ச்சனா எப்படி தப்பிப்பார் என்று எதிர்பார்த்தால், இதோ காப்பாற்ற நான் இருக்கிறேன் என்று கையை தூக்கிக்கொண்டு ஓடி வருகிறார் சந்தியா. என்ன ஒரு சேவை மனப்பான்மை.
இப்போ எப்படியும் இந்த பிரச்சினையில் இருந்து அர்ச்சனாவை சந்தியா காப்பாற்றிவிடுவார். எல்லாம் முடிந்த பிறகு இதோ பாரு அர்ச்சனா நீ பண்ற ப்ளான எல்லாமே கடைசில உனக்குதான் வினையா வந்து முடியும். அதனால இனிமே இப்படி பண்ணாதனு அட்வைஸ் பண்ணுவாங்க. இதுக்கெல்லாம் அடிபணியற ஆளா அர்சசனா. எப்படியோ தப்பிச்சிட்டோம். அடுத்துஎப்படி குடும்பத்தை கெடுக்கலாம்என்றுதான் பார்க்கப்பபோகிறார்.
இது எல்லாத்துக்கும் தெரிஞ்சது தானே இதுக்கே ஏன் இப்படி லென்த்தா கொண்டுபோறீங்க டைரக்டர்சார். அப்புறம் இன்னொன்னு அர்ச்சனாவை மிரட்டுரது விக்கி அப்பாதானு தெரிஞ்சிபோச்சு. அப்போ விக்கிக்கு ப்ளான் போட்டு கொடுத்தது அர்ச்சானதான் அப்டினு சந்தியாவுக்கு தெரிஞ்சிருக்கனுமே…. தெரிஞ்சி மட்டும் என்னாக போகுது அவங்களே மனசுக்குள்ள வச்சிக்குவாங்க சிவகாமிகிட்டயா சொல்ல போறாங்கனு நெனச்சி அத பெருசா எடுத்துக்கலையோ…
அர்ச்சனா இப்படி ஒரு பெரிய பிரச்சினையில மாட்டிங்கிட்டாங்க. இதை மாமியார் சிவகாமிக்கு தெரியாமலே சந்தியா க்ளியர் பண்ணிடுவாங்க அதான் நடக்க போகுது. அதுக்கப்புறம் அர்ச்சனா தனது வில்லத்தனத்தை தொடர்ந்து காட்ட போகிறார். எல்லா சீரியலும் குடும்பத்திற்குள் நடக்கும் சம்பவங்களை அடிப்படையா வச்சதுதான். ஆனால் இதில் நாயகன் நாயகி மட்டும் விதி விலக்கு.
வில்லன் மற்றும் வில்லி கேரக்டரில் வருபவர்கள் ரியலாக செய்தாலும், ஹீரோ மற்றும் ஹீரோயின் ரோல்லில் வருபவர்கள் அநியாயத்துக்கு நல்லவங்காள இருக்காங்க அவங்களுக்கு கோவமே வரமாட்டேங்குதுபா…..