சர்க்கரை பங்கு கொடுத்த சூப்பர் லாபம்.. இன்னொரு ஸ்வீட்டான விஷயமும் இருக்கு!

பங்கு சந்தையில் நிலவி வரும் அசாதாரணமான நிலைக்கு மத்தியில் தற்போது முதலீட்டினை செய்யலாமா? வேண்டாமா? என்பதே தற்போது பெரும் குழப்பமாகவே உள்ளது.

இந்த நிலையில் பங்கு சந்தையில் முதலீடா? வேண்டவே வேண்டாம் என்ற எண்ணமே பலருக்கும் இருக்கும்.

6 மாதத்தில் 1700% லாபம் கொடுத்த ஸ்மால் கேப் பங்கு.. நீங்க வாங்கி வைத்திருக்கீங்களா?

ஆனால் சரிவோ? ஏற்றமோ எல்லா காலக்கட்டத்திலும் லாபம் கொடுக்கும் பங்குகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக அவற்றை தேடிபிடித்து வாங்குவது தான் சரியான டிரேடரின் வேலை எனலாம்.

 ஒராண்டு நிலவரம்

ஒராண்டு நிலவரம்

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு சர்க்கரை துறையில் செயல்பட்டு வரும் ஸ்மால் கேப் நிறுவனமாகும்.

அவத் சுகர் & எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1205 கோடி ரூபாயாகும். இப்பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 88% அதிகரித்துள்ளது. இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 25.68% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாதத்தில் 30.73% ஏற்றம் கண்டுள்ளது.

 

 பங்கு பரிந்துரை

பங்கு பரிந்துரை

அவத் சுகர் & எனர்ஜி லிமிடெட் பங்கு விலையின் இலக்கு விலையானது 890 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது 12 மாத இலக்கு விலையாகும். இந்த நிறுவனத்தின் எத்தனால் விற்பனை 44 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்க்கரை அளவு குறைந்த நிலையில், விற்பனையானது 8.7% குறைந்து, 758.7 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

 எபிட்டா விகிதம்
 

எபிட்டா விகிதம்

எபிட்டா விகிதம் 84.9 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டினை காட்டிலும் 20.7% குறைந்துள்ளது. இதன் மார்ஜின் விகிதம் 11.2%. இதன் வரிக்கு பிந்தைய லாபம் 9.3% குறைந்து, 51.3 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

 இருப்பு சரிவு

இருப்பு சரிவு

இந்த நிறுவனம் மேற்கொண்டு தொடர்ந்து அதன் வணிகத்திறனை மேம்படுத்தி வருகின்றது. இதனை இன்னும் மேம்படுத்தும் விதமாக சர்க்கரையின் இருப்பும் தொடர்ந்து குறைந்து வருகின்றது. இது கடந்த செப்டம்பர் 2019ல் 14.5MT ஆக இருந்தது. இது கடந்த செப்டம்பர் 2021ல் 8.2 MT ஆகவும், இதே செப்டம்பர் 2022 நிலவரப்படி 7 MT ஆக குறைந்துள்ளது. இதனால் சர்க்கரை விலை குறையாமல் இருக்க வழிவகுக்கும். இனி வரவிருக்கும் ஆண்டுகளில் கடன் விகிதமும் குறையும்.

 வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 177% அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை 2017ல் 220 ரூபாயில் இருந்து, மே 2021ல் 614 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதன் CAGR விகிதம் 15.7% அதிகரித்துள்ளது. இது FY22 – FY24Eல் 24.1% ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது. இந்த நிலையில் தான் இப்பங்கினை வாங்கலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது. இதன்

 இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

அவத் சுகர் & எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 3.28% குறைந்து, என் எஸ் இ-யில் 594.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 885 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 292.05 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 614.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 588 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கு விலையானது இன்று 3.15% குறைந்து, 594.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 884.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 291.85 ரூபாயாகும். இதன் இன்றைய உச்ச விலை 884.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 291.85 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

This sugar stock surged over 85%; analysts expects more upside

ICICI Securities expects Avadh Sugar & Energy Ltd share price may rise in coming months. The target price is set at Rs,890.

Story first published: Thursday, May 12, 2022, 22:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.