பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஷிரின் அபு அக்லா பெண் ஊடகவியலாளரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். பலஸ்தீன மேற்குக் கரை பிரதேசத்தில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அத்து மீறலை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த வேளையில் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், இந்தத் தாக்குதலை பலஸ்தீன ஆயுததாரிகள் மேற்கொண்டிருக்க முடியும் என்று இஸ்ரேல் கூறினாலும், அவர் பணியாற்றிய அல்-ஜசீரா தொலைக்காட்சி அதனை முற்றாக நிராகரித்துள்ளது. ஷரின் அபு அக்லா என்ற ஊடகவியலாளர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொலை செய்ததாக அல்-ஜசீரா தொலைக்காட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.