சிதம்பரம் நடராஜர் கோவிலில் விசாரணை மேற்கொள்ள சென்ற துணை ஆணையர் தலைமையிலான குழுவை கோவிலுக்குள் அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு கோவில்களை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த ஆண்டு மானிய கோரிக்கையில் நகர்புற பகுதிகளில் உள்ள கோவில்களை சீரமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையிலான குழுவை கோவிலுக்குள் அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துள்ளனர். படிப்படியாக சட்டபூர்வமாக எந்த ஒரு தவறும் நடைபெறாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நானும், துறையின் செயலாளரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.
போலவே ஆர்.ஏ.புரம் பகுதியில் தனி நபர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளாரா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளோம். யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆதீன பட்டினப்பிரவேச விவகாரத்தை பொறுத்தவரை, பயத்தின் அடிப்படையில் பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது. எதிர்காலங்களில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்.
இதையும் படிங்க… திருச்சியில் நட்சத்திர விடுதியில் தீ : நள்ளிரவில் 5 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்
மனித உரிமை மீறல்கள் இல்லாமல் வரும் காலங்களில் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் மேலும் கீ.வீரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். மற்றபடி உண்மையில் இந்த அரசு ஆத்திகர், நாத்திகர் என அனைவருக்குமான அரசாக உள்ளது. அவ்வளவுதான்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM