டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்சன் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இவரை டாடா நிறுவனம் ஏர் இந்தியா தலைவராக நியமனம் செய்துள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில், அதிக தொகை கேட்ட டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்பனை செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, ஏர் இந்தியாவில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் டாடா குழுமம் ஈடுபட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது. இவர், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர். மேலும் துருக்கி அதிபர் எட்டோகனுக்கு நெருக்கமானவர். இதைத்தொடர்ந்து, இல்கர் ஐசி. ஏப்ரல் 1-ம் தேதி இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார். அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. அதைத்தொடர்ந்து அவர் பதவி ஏற்க மறுத்துவிட்டார்.
இதன் காரணமாக ஏர்இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் வழங்கியுள்ளது.
இந்த நிலையல், தற்போது அந்நிறுவனத்தின் புதிய தலைவர் அறிவிக்கப்பட்டு உள்ளது. டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் வில்சனை (51) டாடா குழுமம் நியமித்துள்ளது. கேம்ப்பெல் வில்சன் விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவர் இதற்கு சிங்கப்பூர் ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணி யாற்றியவர்.
மத்திய அரசின் வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தாண்டு வாங்கிய டாடா குழுமம் தற்போது ஏர் ஆசியா இந்தியா நிறுவனத்தையும் ஏர் இந்தியா நிறுவனத்தையும் இணைத்து ஏர் இந்தியா பெயரிலேயே நடத்த முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.