மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டாடா குழுமம் எதிர்காலத்தில் வர இருக்கும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பேட்டரி தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான ப்ளூ பிரிண்ட்-ஐ தயாரித்து வருவதாக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
CII வர்த்தக உச்சி மாநாடு 2022-ல் பேசிய சந்திரசேகரன், டாடா குழுமம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்க ஒரு பெரிய மாற்றத்தில் இருப்பதாகவும், கார்பன் பயன்பாட்டை குறைப்பதற்காக வைத்துள்ள இலக்கு குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
இந்தியா ‘இந்த’ 5 விஷயத்தை தவிர்க்க முடியாது.. டாடா சந்திரேசகரன் சொல்வது என்ன..?!
5ஜி
எங்களது முக்கிய வணிகங்களில் டிஜிட்டல், தரவு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றைப் புகுத்தி எதிர்காலத்துக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். உலகளாவிய சந்தைகளுக்கு 5ஜி மற்றும் அதற்கு தொடர்புடைய தொலைத்தொடர்பு சாதனங்களை உருவாக்க ஒரு நிறுவனத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம்.
ப்ளூ பிரிண்ட்
இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் பேட்டரியை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை அமைக்க ப்ளூ பிரிண்ட் தயார் செய்துவருகிறோம்.
கார் உற்பத்தி
பயணிகள் கார் உற்பத்தியில் குறிப்பிடத்தக்கப் பல மாற்றங்களைச் செய்துள்ளோம். அதுதான் தற்போது எங்களது மோட்டார் சந்தை விரிவடைந்து வருவதற்கான காரணமாக உள்ளது. மாற்று எரிபொருள் திட்டங்களுக்காக ஹைட்ரஜன் எரிபொருள் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு வருகிறோம். ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களிலும் இதை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.
சாதனை
எலக்ட்ரிக் கார் விற்பனையில் நெக்ஸான் ஈவி மற்றும் டைகர் ஈவி வாகனங்கள் அதிகளவில் விற்று சாதனை செய்துள்ளது. விரைவில் 500 கிலோ மீட்டர் வரையில் செல்லும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய அண்மையில் அவியா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். மினி டிரக் டாடா ஏஸ் வாகனங்களில் எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹட்ரஜன் எரிபொருள், ஸ்டீல் என எல்லாவற்றிலும் புதிய மாற்றங்களைச் செய்ய டாடா நிறுவனம் ப்ளூ பிரிண்ட் தயார் செய்து வருகிறது என சந்திர சேகரன் தெரிவித்துள்ளார்.
Tata Son’s Preparing A Blueprint To Launch ‘Battery Company’, In India And Abroad
Tata Son’s Preparing A Blueprint To Launch ‘Battery Company’, In India And Abroad | டாடா குழுமத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகும் ப்ளூ பிரிண்ட்.. சந்திரசேகரன் அறிவிப்பு!