சர்வதேச செவிலியர் தினம் மே 12ஆம் தேதி 1965ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இத்தினம் அர்ப்பணிப்புடனும், சேவை மனப்பான்மையுடனும் செவிலியர்கள், நம் சமூகத்திற்கு ஆற்றிவரும் சிறப்பான பங்களிப்பை நன்றியுடன் நினைவுக்கூற இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், செவிலியர்கள் பின்பற்ற வேண்டிய நவீன நடைமுறைகளை உருவாக்கி தந்தவரான ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தன்னலம் பாராது இரவு, பகலாக சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நோயைக் குணப்படுத்துவதிலும் நெருக்கடியான நேரங்களில் உயிரைக் காப்பதிலும் செவிலியர்களின் பங்கு மகத்தானது.
தன்னலம் பாராது இரவு, பகலாக சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நோயைக் குணப்படுத்துவதிலும் நெருக்கடியான நேரங்களில் உயிரைக் காப்பதிலும் செவிலியர்களின் பங்கு மகத்தானது. (1/4) #Worldnurseday
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 12, 2022
தாயன்போடு செவிலியர்கள் செய்திடும் சேவை போற்றி மதிக்கத் தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த செவிலியர்களின் வாழ்வியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை இந்த தினத்தில் யோசித்து பார்க்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. குறைந்த ஊதியம்; அதிக வேலை என்று செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை நம் கண்ணெதிரே பார்க்கிறோம். அதிலும் தமிழகத்தில் அதிக அளவிலான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். செவிலியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை வாழ்த்துவதோடு விட்டுவிடாமல் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும். இதற்காக செவிலியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வென்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.