தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை திரும்பப்பெற வேண்டும் என்று சுவரொட்டி ஒட்டப்பட்ட விவகாரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மதுரையில் தமிழக ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என்று சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 2 பேரை இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோரிப்பாளையம் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த இருவர், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சுவரொட்டி ஒட்டியதாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் வந்துள்ளது.
இதனை அடுத்து பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த மதுரை மாவட்ட தலைவர் முகமது, மாவட்ட செயலாளர் சையது இசாக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ரவி அவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அபாயகரமான ஒரு அமைப்பு என்றும் அதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.