உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நட்டத்தால், குஜராத் மற்றும் சென்னையில் உள்ள தங்களது தொழிற்சாலைகளில் படிப்படியாக உற்பத்தியைக் குறைத்து, சென்ற ஆண்டு முடியது.
மீண்டும் அதல பாதாளம் நோக்கி செல்லும் ரூபாய்..ஏன்.. 3 முக்கிய காரணங்கள் இதோ!
குஜராத்தில் உள்ள ஃபோர்டு ஆலையை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள தொழிற்சாலையை விற்பதற்குச் சரியான நிறுவனத்தையும் ஃபோர்டு தேடி வந்தது.
தமிழ்நாடு அரசு
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவால் ஆயிரம் கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்க நேரிட்டது. எனவே ஃபோர்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் சப்ளையர்களை அழைத்து தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்தது.
எலக்ட்ரிக் கார்
தொடர்ந்து, பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசு உதவியுடன், இந்திய அரசு வழங்கும் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மானிய திட்டத்தைப் பயன்படுத்தி எலக்ட்ரிக் கார்களை சென்னை தொழிற்சாலையில் தயாரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய உள்ளதாக ஃபோர்டு அறிவித்தது.
பல்டி அடித்த ஃபோர்டு
இந்நிலையில் “கவனமான ஆய்வுக்குப் பிறகு, எந்த இந்திய ஆலைகளிலிருந்தும் எலக்டிரிக் காரை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்போவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று ஃபோர்டு இந்தியாவின் செய்தித் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்?
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவுக்கு என்ன காரணங்கள் என தெரிவிக்கப்படவில்லை. எனவே சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் விற்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளது.
ஃபோர்டு இந்தியா
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் தொடங்கப்பட்ட 20 ஆண்டுகளில் இதுவரையில் லாபம் என்பதையே பெறவில்லை. தொழிற்சாலைகளை மூடும் போது 2 சதவீத சந்தை மட்டுமே ஃபோர்டு நிறுவனத்திடம் இருந்தது.
இந்திய அரசு
இந்திய அரசு எலக்ட்ரிக் வாகனம் தயாரிப்புகளை ஊக்குவிக்க 28 ஆயிரம் கோடி ரூபாய் வரை மானியத்தை அறிவித்துள்ளது.அதனைப் பயன்படுத்தி டாடா மோட்டார்ஸ், மஹிந்தரா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் உற்பத்தியைச் செய்துவருகின்றன.
Ford U-Turn’s In EV Exports From India
Ford U-Turn’s In EV Exports From India | திடீரென பல்டி அடித்த போர்டு.. ஏமாற்றத்தில் தமிழ்நாடு!