திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கடைவீதியில் ஏராளமான நபர்கள் தினமும் பிச்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுத்த நபர் ஒருவர் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்று பிச்சை கேட்டுள்ளார்.
அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் கை, கால்கள் நன்றாக தானே இருக்கிறது, என் கடைக்கு வேலைக்கு வா சம்பளம் தருகிறேன் என கூறி உள்ளார். சம்பளம் எவ்வளவு தருவாய் என அந்த பிச்சை எடுக்கும் நபர் கேட்ட போது, 400 ரூபாய் ஒரு நாளைக்கு தருகிறேன் என கூறி உள்ளார்.
அதற்கு அந்த பிச்சை எடுத்த நபரோ 400 ரூபாய்க்கு நான் வேலை செய்ய வேண்டுமா? நான் ஒரு நாளைக்கு ரூ.2000 சம்பாதிக்கிறேன் என ஏளனமாக பதில் அளிக்கிறார். அதற்கு உரிமையாளர் இப்படி ஓசியில் பணம் கொடுத்தால் நீ சம்பாதிக்க தான் செய்வாய் என கூறுகிறார்.