கடந்த 2019 ஆம் ஆண்டு திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நாடாக இந்தியா பிரகடனப்படுத்திக் கொண்டது. இருந்த பொதும், நாட்டில் இன்னமும் 19 சதவீதம் போ் கழிவறை வசதியின்றி இருப்பதாக தேசிய குடும்ப நலத் துறை (என்எஃப்எச்எஸ்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2019-21- ஆண்டில் தேசிய குடும்ப நலத் துறை (என்எஃப்எச்எஸ்) மேற்கொண்ட ஆய்வு விவரம் வெளியாகியுள்ளது. அதன் புள்ளி விவரம் பின்வருமாறு:
நாட்டின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த 6.37 லட்சம் குடும்பங்களை உள்ளடக்கிய 7,24,115 பெண்களிடமும், 1,01,839 ஆண்களிடமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
* 69 சதவீத குடும்பத்தினா் வேறு குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்ளாத கழிவறையைப் பயன்படுத்தி வருகின்றனா்.
* நகா்ப்புறங்களில் 11 சதவீத குடும்பத்தினா் கழிவறையை பிற குடும்பத்தினருடன் பகிா்ந்து கொள்கின்றனா்.
* கிராமப்புறங்களில் இது 7 சதவீதமாக உள்ளது.
* 19 சதவீத வீடுகளில் கழிவறை வசதி இல்லை. அவா்கள் திறந்தவெளியைத் தான் பயன்படுத்துகின்றனா்.
* கடந்த 2015-16-இல் திறந்தவெளியைப் பயன்படுத்துபவா்களின் விகிதம் 39 சதவீதமாக பதிவானது.
* கழிவறை பயன்பாட்டில் பிகாா் (62%), ஜாா்க்கண்ட் (70%), ஒடிஸா (71%) பின்தங்கியுள்ளன.
* பாதுகாப்பான குடிநீரைப் பொருத்தமட்டில் 58 சதவீத குடும்பத்தினா் சுத்திகரிக்கப்படாத குடிநீரை குடித்து வருகின்றனர். இதில், கிராமப்புறங்களில் 66 சதவீத குடும்பத்தினரும், நகா்ப்புறங்களில் 44 சதவீத குடும்பத்தினரும் அடங்குவர்.
* சுத்திகரிக்கப்படாத குடிநீரை பருகுகின்றனா். தண்ணீரை கொதிக்க வைப்பது அல்லது துணியைக் கொண்டு வடிகட்டுவது ஆகிய பொதுவான வழிமுறைகள் குடிநீரை சுத்திகரிக்க கடைப்பிடிக்கப்படுகின்றன.
* நாட்டில் 41 சதவீத வீடுகளில் சமைப்பதற்கு விறகு, வறட்டி போன்ற திட எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன.