ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட ஏழு மணித்தியாலங்களில் மாகாணங்களுக்குள் டிப்போ மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நீண்ட தூரப் போக்குவரத்து பஸ் சேவைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் இன்று சேவைக்கு சமூகமளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மாகாணங்களுக்குள், குறைந்த பஸ்கள் சேவையில் ஈடுபட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இடம்பெற மாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.