பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்கு கட்டணங்கள் உயர்வு.. உடனே படிங்க!

பொதுத்துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி மே 29-ம் தேதி முதல் தங்களது சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளது.

மாதாந்திர இலவச பரிவர்த்தனை கட்டணங்கள் முதல் வங்கி அல்லாத பரிவர்த்தனைகள் வரை பல்வேறு மாற்றங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி செய்துள்ளது.

அதானி குழும பங்குகளினால் முதலீட்டாளர்கள் கவலை.. உச்சத்தில் இருந்து 34% வரை சரிவு.. ஏன்?

இலவச பரிவர்த்தனை

இலவச பரிவர்த்தனை

பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்கில் இப்போது ஒரு அண்டுக்கு 40 பரிவர்த்தனைகள் வரை இலவசமாக செய்யலாம். அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மே 29-ம் தேதி முதல் இந்த இலவச பரிவர்த்தனை வரம்பை 40-ல் இருந்து 50 ஆக பஞ்சாப் நேஷ்னல் வங்கி உயர்த்தியுள்ளது. 40 பரிவர்த்தனைக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செக் புக்

செக் புக்

பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 25 லீப் கொண்ட செக் புக் இலவசமாக வழங்கப்படும். அதை இப்போது 20 ஆக குறைத்து அறிவித்துள்ளார்கள். ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் ரிட்டர்ன் ஆனால் 100 ரூபாய் என்று இருந்த கட்டணத்தை 250 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் 250 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

லாக்கர் அபராதம்
 

லாக்கர் அபராதம்

வங்கி லாக்கர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதற்கான வாடகையை ஒரு வருடம் வரை தாமதமாக செலுத்தினால், 25 சதவீத ஆண்டு வாடகையை அபராதமாக செலுத்த வேண்டும். இரண்டு வருடங்கள் என்றால் 50 சதவீதம் வாடகை கட்டணம் அபராதம். 3 வருடத்திற்கு மேல் சென்றால் வங்கி லாக்கர் உடைக்கப்படும்.

5 வருட லாக்கர் வாடகை கட்டணம்

5 வருட லாக்கர் வாடகை கட்டணம்

மெட்ரோ மற்றும் புறநகர் பகுதிகள் சிறிய லாக்கருக்கு 5 ஆண்டுக்கு 9000 ரூபாய் கட்டணம். மீடியம் சைஸ் லாக்கருக்கு 15,750 ரூபாய். பெரிய லாக்கருக்கு 24,750 ரூபாய் என 45 ஆயிரம் ரூபாய் வரை லாக்கர் கட்டணம் உள்ளது. இதுவே பிற கிளைகளில் 5625 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரையில் லாக்கர் கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரொக்கப் பரிவர்த்தனை

ரொக்கப் பரிவர்த்தனை

ஒரு நாளைக்கு ரூ. 1 லட்சம் ரூபாய் வரையில் ரொக்கப் பரிவர்த்தனை இலவசம். ரூ.1 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு 1 ரூபாய் என குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PNB Bank Savings Account, Cheque Rules and Others Revised; Check Details

PNB Bank Savings Account, Cheque Rules and Others Revised; Check Details | பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்கு கட்டணங்கள் உயர்வு.. உடனே படிங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.