பிரபல பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளர் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 ஆண்டுகளுக்கு மேலாக அல் ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை சேகரித்து வந்த ஷிரீன் அபு ஜெனின் நகர அகதிகள் முகாமில் சோதனையிட்ட இஸ்ரேல் வீரர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யேக உடையை அணிந்திருந்த போதும், அவர் தலையில் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து பாலஸ்தீனர்கள் பேரணி சென்றனர்.
அப்போது அவர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.