சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
சமகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரமதாச முன்வைத்துள்ள 4 நிபந்தனைகள்:
- மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.
- அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும்.
-
அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும்.
- நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகு பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என சஜித் பிரமதாச நிபந்தனை வைத்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச உட்பட 17 பேர் வெளிநாடு பயணிக்க தடை! இலங்கை நீதிமன்றம் அதிரடி