பிரேசிலில் காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகாவும், ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையும் மோதினர்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் 21-17, 21-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார் .
இதனை தொடர்ந்து கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை எதிர்த்து ராஜஸ்தானை சேர்ந்த அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ஜெர்லின் அனிகா விளையாடினார் ,
இந்த போட்டியில் 21-14, 21-7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றனர் .
பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்காக விளையாடி 2 தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ள மதுரை பள்ளி மாணவிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தும் ,பாராட்டியும் வருகின்றனர்.