இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையரான சுஷில் சந்திரா பதவி வகித்து வருகிறார். அவர் மே 14-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, வரும் 15-ஆம் தேதியில் இருந்து ராஜீவ் குமார் புதிய தலைமை ஆணையராக பொறுப்பேற்பார் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
1984ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரியாக ராஜீவ் குமார் தன்னுடைய பணியை தொடங்கினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக வங்கிகள் , காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்றை கவனிக்கும் துறையின் செயலாளராக பணி புரிந்திருக்கிறார். இதனையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.