முழு டேங்க் நிரப்பும்போது வாகனம் வெடிக்கும் என்பது வதந்தி. ஆனால் அதுவே வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, இந்தச் செய்தி உண்மையாகிறது. சில மோசமான விபத்துகளில் Explosion–க்கு முழு டேங்க் பெட்ரோல் காரணமாக இருந்திருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெட்ரோல் மீட்டர் சர்ருன்னு ஓடும் வேகத்தை `கன் பாய்ண்ட் லெவல்’ என்று சொல்வார்கள். மொத்தம் 3 லெவல்களில் இருக்கின்றன. ‘பாயின்ட் 1 வெச்சுப் போடுங்க’ என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துங்கள். அதேபோல், கடைசி சொட்டுக்குப் பிறகே கன்னை வெளியே எடுக்கச் சொல்லுங்கள்!
காரின் பெட்ரோல் டேங்க் எந்தப் பக்கம் இருக்கிறது என்பதை இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் டேங்க் சிம்பலுக்குப் பக்கத்தில் உள்ள அம்புக்குறியை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.
தயவுசெய்து உங்கள் காரின் டேங்க்கில் டீசல்/பெட்ரோல் என்று 25 ரூபாய்க்கு ஸ்டிக்கர் ஒட்டிவிடுங்கள். பங்க் ஊழியர்கள் என்ன மூடில் இருப்பார்கள் என்று தெரியாது. பெட்ரோல் காரில் டீசலோ, டீசல் காரில் பெட்ரோலோ நிரப்பினால்… பெரும் சிக்கல்.
பைக்குக்கு பெட்ரோல் நிரப்பும்போது, குழந்தைகளை டேங்க்கில் வைத்துக்கொண்டு பெட்ரோல் போடுவது கூடாது. பெட்ரோல் துளி குழந்தைகளின் கண்களில் தெறித்தால்… அவ்வளவுதான்!
மொபைல் டார்ச் அடித்து பைக்கில் பெட்ரோல் எவ்வளவு இருக்குனு பார்ப்பது விபரீதம். அந்நேரம் அழைப்பு வந்தால்… கதிர்வீச்சு அதிகமாகி எக்ஸ்ப்ளோஷன் ஆக வாய்ப்புண்டு
பெட்ரோல் பங்க்கில் மொபைலுக்கு அழைப்பு வந்தால் தயவுசெய்து அட்டெண்ட் செய்யாதீர்கள்.
காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, தயவுசெய்து இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, கீழே இறங்கி நீங்களே டேங்க்கைத் திறந்து, மீட்டரை செக் செய்து, டேங்க்கைச் சரியாக மூடிய பிறகே காருக்குள் ஏறுங்கள்.
டேங்க்கை மூடும்போது 2 அல்லது 3 தடவை ‘க்க்ர்ரிட்ட்’ சத்தம் கேட்டாலே போதும்; நான்ஸ்டாப்பாக ‘க்க்ர்ரிட்ட்’ சத்தம் கேட்கும் வரை மூடுவது தவறு.
‘ஆட்டோ கட்’டுக்குப் பிறகு தழும்பத் தழும்ப எரிபொருள் நிரப்புவது தேவையில்லை. விபத்தின்போது இது ஆபத்து.
பெட்ரோல் கடைசிச் சொட்டு காலியாகும்வரை ஓட்டுவது கூடாது. ரிசர்வ் அல்லது மஞ்சள் டேங்க் வார்னிங் வந்த உடனேயே பெட்ரோல் போட்டு விடுங்கள். கவனமாக இருங்க மக்கா!