பெரும் நெருக்கடியில் இலங்கை – ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்


பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், தற்போதைய நெருக்கடி அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் போது நிதி குழப்பங்களை நிவர்த்தி செய்வதற்கும் அரசியல் பிளவுகளைக் சரிசெய்வதற்கும் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்க வேண்டும்.

பெரும் நெருக்கடியில் இலங்கை - ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்

நாங்கள் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அதிலிருந்து நாங்கள் வெளியேற வேண்டும்,” என்று ரணில் விக்கிரமசிங்க ரொய்ட்டர் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிக்கு சாத்தியமான தீர்வு உள்ளதா என்று கேட்டதற்கு, அவர் பதிலளித்தார் “நிச்சயமாக.” இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 73 வயதான ரணில் விக்கிரமசிங்க ஒரு பொருளாதார தாராளவாதி ஆவார், அவர் சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் அனுபவம் பெற்றவர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை கோரியுள்ள இலங்கை ஆரம்பகட்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.

பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களுடன் உறவுகளை ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார்.


புதிய பிரதமருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து

மிகவும் நெருக்கடியான நேரத்தில் நமது நாட்டை வழிநடத்தும் சவாலான பணியை மேற்கொள்ள முன்வந்த புதிய பிரதமருக்கு எனது நல்வாழ்த்துக்கள்,” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


தற்போதைய நெருக்கடி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

பொருளாதார முறைகேடு, கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் அரச கஜானாவை வெறுமையாக்கியுள்ளன.

அதாவது இலங்கையில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன், நாளாந்தம் மின் தடைகளை எதிர்கொண்டுள்ளது. சாதாரண மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுவதால் விரக்தியடைந்துள்ளனர்.      

பெரும் நெருக்கடியில் இலங்கை - ரணிலுக்கு காத்திருக்கும் சவால்கள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.