ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது ஏமாற்றம் அளிப்பதாக ஜோலார்பேட்டை மக்கள் தெரிவித்துள்ளனர்.
பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு தாமதிக்கும் நிலையில் ஏன் நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். பேரறிவாளனுக்கு பிணை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுதலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், தேதி ஒத்திவைக்கப்பட்டது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக ஜோலார்பேட்டை கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
”பிணையில் இருந்தாலும் காவல்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளால் பேரறிவாளனை எளிதில் அனுக முடியாத நிலை உள்ளது. பட்டதாரியான பேரறிவாளன் விடுதலைக்குப்பின் ஜோலார்பேட்டை இளைஞர்களுக்கு கல்வி உதவியை செய்வார்” என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முயற்சித்திருக்கும் நிலையில் இன்னும் காலதாமதம் செய்யாமல் மத்திய அரசு விடுதலை செய்வதில் உதவ வேண்டும் என வலியுறுத்துகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM