பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கி படித்து வந்தார். அவருக்கும் அதே பள்ளியை சேர்ந்த அஜித் என்ற மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டது.
இருவருன் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்துள்ளன. இதனால், மாணவி கர்பமடைந்தார். முள்ளுக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் 18 வயதுடைய மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. மாணவியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அஞ்சித்தை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது