மறு ஆய்வின் நோக்கம் சட்டப்பிரிவை நீக்ககுவதல்ல! – வாசகர்களின் கமெண்ட்ஸ்! #Like#Dislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 11-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘தேசத்துரோக சட்டத்தை மறு ஆய்வு செய்ய முன்வரும் மத்திய அரசு… நோக்கம் என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Nellai D Muthuselvam
இறையாண்மைக்கும் உட்பட்டு அடிப்படை உரிமைகளுக்காக அமைதியான வழியில் போராடியவர்களை ஒடுக்குவதற்காக கடந்த காலங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். மறு ஆய்வின் நோக்கம் சட்டப்பிரிவு நீக்கபடும் என்ற அர்த்தம் இல்லை.
சில அம்சங்கள் நீக்கப்படலாம் சில அம்சங்கள் சேர்க்கப்படலாம் .
கருத்து சுதந்திரம் , அடிப்படை உரிமை என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். அந்நிய நாட்டு அமைப்புகள் மூலம் நிதியுதவி பெற்று இந்தியாவில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
நாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் எல்லையில் மட்டுமல்ல நாட்டிற்குள்ளே நடந்து தான் வருகிறது.அவர்கள் தான் தேச துரோக சட்டத்தின் அவசியத்தை நிலைப்படுத்திகன்றனர்
image
வேட்டையன்
எதிர் கட்சிகளையும் அப்பாவிகளையும் கருத்து சுதந்திரத்தையும் ஒடுக்கும் விதமாகவும் பயன்படுத்திவந்த சட்டத்தை மாற்றவேண்டியது அவசியமாகின்றது…காலநிலையில் அனைத்தும் மாற்றவேண்டிய நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை ஒடுக்க கொண்டுவந்த சட்டத்தை மாற்றங்களுடன் கொண்டுவரவேண்டும்…
கண்டிப்பாக அப்பாவிகள் பாதிக்கபடாமலும் அரசியல் பலிவாங்குவதற்கு இந்த சட்டத்தை பயன்படுத்தாத மாதிரி மாற்றியமைக்கவேண்டும்…
Palani Pe
அவங்க செய்ய முன் வரல. நீதிமன்றத்தில் வந்த வழக்கும், அதற்கு நீதிமன்றம் தந்த உத்தரவும்.
காஜா நவாஸ்
ஹ ஹஹஹ அடுத்து இவிக போக கூடாது இல்லSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.