மும்பையை மீண்டும் சாய்க்குமா சென்னை? இன்றைய ஆட்டத்தில் மோதல்

 CSK vs MI Live Cricket Score in tamil: 15வது ஐபில் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 7ல் தோல்வி என 8 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் இருக்கிறது. சென்னை அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டுவது என்பது அதிர்ஷ்டத்தை பொறுத்ததே எனலாம். அந்த அணி எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்து ரன்-ரேட்டிலும் உயரிய நிலையில் இருந்தால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது

மும்பை அணியை பொறுத்தவரை, நடப்பு தொடரில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நிலையான திறனை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இதை அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே மும்பை அணி தங்களுடைய தவறுகளை சரிசெய்து எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் ஏற்றம் காண முயற்சிக்கும்.

மும்பைக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சென்னை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர சென்னை அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும். மொத்தத்தில் சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகள் மோதும் இன்றை ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   12 May 2022

Chennai Super Kings 

vs

Mumbai Indians  

Match Yet To Begin ( Day – Match 59 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.