சென்னை: தெற்கு ரயில்வேயின் பல ரயில் நிலையங்களில் பயணச் சீட்டுகள், நடைமேடை டிக்கெட்கள், சீசன் டிக்கெட்கள் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் (ஏடிவிஎம்) நிறுவப்பட்டுள்ளன. ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், க்யூஆர் குறியீட்டின் அடிப்படையில் டிக்கெட் கட்டணத்தைச் செலுத்தி தானியங்கி இயந்திரங்கள் மூலம் டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த க்யூஆர் குறியீடு வசதியைப் பயன்படுத்தி பயணம், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் வாங்கலாம். அத்துடன், ஏடிவிஎம்களில் உருவாக்கப்பட்ட க்யூஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி ஸ்மார்ட் கார்டையும் ரீசார்ஜ் செய்யலாம். க்யூஆர் குறியீட்டை பயன்படுத்தி சீசன் டிக்கெட் வாங்கும் போது, கட்டணத்தில் 0.5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.