லாக்டவுன் எதிரொலி.. 10 வருட சரிவில் சீனா.. அப்போ இந்தியா..?

சீனாவில் கொரோனா லாக்டவுன் காரணமாக தொழிற்சாலைகள் மற்றும் ஷோரூம்கள் முழுமையாகத் திறக்கப்படாத நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான ஒட்டுமொத்த வாகன விற்பனை கிட்டத்தட்ட 48% சரிந்துள்ளது.

ஆனால் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்தது மற்றும் சீன பிராண்டுகள் சர்வதேச பிராண்டுகளின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் கைப்பற்றியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஷாங்காய் மற்றும் பிற நகரங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்து படிப்படியாகச் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த காரணத்தால் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலை தேடுபவர்கள் கவனத்திற்கு.. ஸ்வீட் எடுங்க.. கொண்டாடுங்க!

ஜீரோ கோவிட் பாலிசி

ஜீரோ கோவிட் பாலிசி

உலக நாடுகளில் கொரோனா தொற்று இருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இயங்கி வருகிறது. ஆனால் சீனா மட்டும் தனது ஜீரோ கோவிட் பாலிசியைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

இதனால் சீன பொருளாதார வளர்ச்சியின் அளவீடுகள் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் வாகனங்களின் மாதாந்திர விற்பனை அளவு கடந்த 10 வருடத்தில் மிகக் குறைவாக அளவீட்டை பதிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

சீன ஆட்டோமொபைல்

சீன ஆட்டோமொபைல்

ஏப்ரல் மாதம் சீனாவில் பயணிகள் கார்கள் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை தரவுகளைச் சீனாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (CAAM) புதன்கிழமை வெளியிட்டு உள்ளது.

ரீடைல் விற்பனை
 

ரீடைல் விற்பனை

CAAM அமைப்பின் கணக்கின் படி ஏப்ரல் மாதத்தில் பயணிகள் கார்களின் ரீடைல் விற்பனை மட்டும் கிட்டத்தட்ட 36 சதவீதம் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2022 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வாகன விற்பனை 12% குறைந்துள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள்

எலக்ட்ரிக் வாகனங்கள்

மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் கார்களின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 45% உயர்ந்துள்ளது, மேலும் ஆண்டின் முதல் நான்கு மாத விற்பனை அளவை 2021ஆம் ஆண்டின் அளவீட்டை கணக்கிடும் போது இரட்டிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கார்களின் விற்பனையில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை 10.59 சதவீதம் குறைந்துள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (SIAM) தரவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

மொத்த விலை விற்பனை

மொத்த விலை விற்பனை

பயணிகள் கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஏப்ரல் 2021 இல் 1,270,604 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 2022 இல் 1,421,241 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு மொத்த விலை விற்பனை 12% அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China vehicle sales falls 48 percent Amid Covid lockdown

China vehicle sales falls 48 percent Amid Covid lockdown லாக்டவுன் எதிரொலி.. 10 வருட சரிவில் சீனா.. அப்போ இந்தியா..?

Story first published: Thursday, May 12, 2022, 8:30 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.