சமீப காலமாக சந்தையில் ஏற்றம் என்பதை விட, அதிகளவில் வீழ்ச்சி, சரிவு என்ற வார்த்தைகளே அதிகளவில் இருந்து வருகின்றன. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மோசமான சரிவினைக் கண்டு வருகின்றன.
சில நல்ல நிறுவனங்களின் பங்குகள் கூட பலத்த சரிவினைக் கண்டுள்ளன. இந்த நிலையில் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற எண்ணம் நிலவி வருகின்றது.
இந்த நெருக்கடியான நேரத்தில் நிபுணர்கள் பரிந்துரை செய்யும் ஒரு மல்டிபேக்கர் பங்கு கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். ஏன் இந்த பங்கானது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? இலக்கு ஏதேனும் உண்டா வாருங்கள் பார்க்கலாம்.
கட்டணத்தை குறைக்க விளம்பரம்.. நெட்ஃபிளிக்ஸின் புதிய திட்டம்!
நிறுவனம் என்ன செய்கிறது?
கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்(KEI Industries Ltd) டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும் இந்த நிறுவனம் பல்வேறு வகையான கேபிள் சேவைகளை வழங்கி வருகின்றது. இது கூடுதல் உயர் மின்னழுத்தம் (Extra-High Voltage ), நடுத்தர மின்னழுத்தம் (Medium Voltage), குறைந்த மின்னழுத்தம் (Low Voltage) என பலவகையான கேபிள்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றது.
ஓராண்டு நிலவரம்
5000 கூட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், 45க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகின்றது. இப்படி பல சாதகமான விஷயங்களை கொண்டுள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது கடந்த ஒரு ஆண்டில் 110 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கடந்த மூன்று ஆண்டுகளில் 189 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலக்கு என்ன?
இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாமென பரிந்துரை செய்யும் ஷேர்கான் நிறுவனம், அதன் இலக்கு விலையை 1300 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது அதன் மார்ச் காலாண்டு முடிவினைத் தொடர்ந்து இந்த பரிந்துரையானது வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் சிறப்பான கண்ணோட்டம்
பன்முகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் வணிக கண்னோட்டம், சில்லறை விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருதல், உயர் மின்னழுத்த கேபிள்களில் கவனம், ஏற்றுமதியில் கவனம் என இதன் தொழில் அணுகுமுறையானது, இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொடர்ந்து விற்பனையை அதிகரிக்க கவனம் செலுத்தி வரும் நிலையில் இதன் விற்பனை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்று இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்
கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, 5.96% குறைந்து, என் எஸ் இ-யில் 1080.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 1320 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 505.40 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் 5.06% குறைந்து, 1090.30 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இப்பங்கின் 52 வார உச்ச விலை 1319.25 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 505.85 ரூபாயாகும்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
buy this multibagger stock for a target price of Rs.1300; sharekhan
buy this multibagger stock for a target price of Rs.1300; sharekhan/வாவ்.. பக்காவா காய் நகர்த்தும் கேபிள் நிறுவனம்.. ஷேர்கானின் அட்டகாசமான பரிந்துரை!